Wednesday, December 31, 2008

உன்னை
கண்டால்
எனக்கு
பொறாமையாக இருக்கிறது.

ஏனென்றால்,
உன்
முன்
நின்றுதான்

சிரிக்கிறாள்....

கண் சிமிட்டுகிறாள்.......

உதடுகளை
சுருக்கி
காற்றுக்கு
முத்தம்
கொடுக்கிறாள்........

தன்னை
இவ்வுலகின்
இளவரசி என
எண்ணிக்கொண்டு
தன்
கயல்விழிகளால்
காதல்
மொழி பேசுகிறாள்................

அவளின்
பின்
அழகினை
உன்முன்
காட்டி
புன்முறுவல்
பூக்கிறாள்.........

நீ
ஏன்
அவளிடம்
காதல்
கொள்ளவில்லை..

நான்
வந்தால்
என்னிடமே
என்னை காட்டிக்கொடுக்கிறாய்.

No comments: