உன்னை பார்த்ததும்
கவிதை எழுத தோன்றுகிறது
என்றான்...
ஆனால் எனக்கோ - உன்னை
பார்த்துக்கொண்டிருக்க தோன்றியது.
உந்தன் வளைவுகள் கண்டு
எந்தன் உணர்வுகள் துளிர்கின்றது.
உந்தன் வண்ணம் கண்டு
எந்தன் எண்ணம் செழிக்கின்றது.
நீ
என் அருகில் வரும்பொழுது
எங்கே என்மேல் விழுவாயோ
என நினைத்து
என் கண்களை மூடிக்கொண்டேன் - ஆனால்
நீயோ
என்னை உரசிச் சென்றாய்.
என் மனம்
உன்னைக்கண்டு தவிக்க
நீயோ மணம் தேடிச் சென்றாய்.
அட வண்ணத்துப்பூச்சியே!
நீ
ஏன் இவ்வளவு
அழகாக இருக்கிறாய்!
என் காதலியைவிட......
No comments:
Post a Comment